CHAT ROOM

Create a Meebo Chat Room

ரஜினியின் அடுத்த படம் பாட்ஷா-2!


1995ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பாட்ஷா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் கமர்ஷியல் வரலாறு படைத்தது. தமிழ் சினிமாவிற்கும் ரஜினிக்கும் 'பாட்ஷா' திரைப்படம் தனி முத்திரை பதித்தது. அந்த காலத்தில் மட்டும் சுமார் ரூ.65 கோடி வசூல் சாதனை புரிந்த இந்த படத்தை புகழ்பெற்ற சத்யா மூவிஸ் தயாரித்தது. தமிழ் ரசிகர்களால் வரவேற்க்கப்பட்ட இந்த திரைப்படம் மீண்டும் ரீமேக் ஆகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ரீமேக் ஐடியாவை கொடுத்தவர் நம்ம சூப்பர் ஸ்டார். சமீபத்தில் ஆர்.எம்.வீ. இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினி, "என்னால் பலன் அடைந்தவர் பலர்; நஷ்டமடைந்த சிலரில் ஆர்.எம்.வீ-யும் ஒருவர். 'பாட்ஷா' போன்ற படத்தை ஆர்எம்வீயால் மட்டுமே மீண்டும் தயாரிக்க முடியும்..."என்று தானாகவே கால்ஷீட்டுடன் நிற்க, பொன்னான சந்தர்ப்பத்தை கப்பென்று பிடித்துக் கொண்டார் ஆர்எம்வீ.

விளைவு, 'எந்திரன்' படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஆர்.எம்.வீயின் சத்யா மூவீஸ் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் 'பாட்ஷா - 2' என்ற தலைப்பில் தீவிர கதை ஆலோசனை நடக்கிறதாம் எனக் கூறிய சத்யா மூவீஸ் இது பாட்ஷாவின் இரண்டாம் பாகம் என்று வெளியிடாமல், புதிய பெயரில் புதிய கதையுடன் உருவாக்கலாம் என்றும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளனவாம். எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

No comments:

Post a Comment