CHAT ROOM

Create a Meebo Chat Room

ரஜினியின் அடுத்த படம் பாட்ஷா-2!


1995ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பாட்ஷா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் கமர்ஷியல் வரலாறு படைத்தது. தமிழ் சினிமாவிற்கும் ரஜினிக்கும் 'பாட்ஷா' திரைப்படம் தனி முத்திரை பதித்தது. அந்த காலத்தில் மட்டும் சுமார் ரூ.65 கோடி வசூல் சாதனை புரிந்த இந்த படத்தை புகழ்பெற்ற சத்யா மூவிஸ் தயாரித்தது. தமிழ் ரசிகர்களால் வரவேற்க்கப்பட்ட இந்த திரைப்படம் மீண்டும் ரீமேக் ஆகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ரீமேக் ஐடியாவை கொடுத்தவர் நம்ம சூப்பர் ஸ்டார். சமீபத்தில் ஆர்.எம்.வீ. இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினி, "என்னால் பலன் அடைந்தவர் பலர்; நஷ்டமடைந்த சிலரில் ஆர்.எம்.வீ-யும் ஒருவர். 'பாட்ஷா' போன்ற படத்தை ஆர்எம்வீயால் மட்டுமே மீண்டும் தயாரிக்க முடியும்..."என்று தானாகவே கால்ஷீட்டுடன் நிற்க, பொன்னான சந்தர்ப்பத்தை கப்பென்று பிடித்துக் கொண்டார் ஆர்எம்வீ.

விளைவு, 'எந்திரன்' படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஆர்.எம்.வீயின் சத்யா மூவீஸ் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் 'பாட்ஷா - 2' என்ற தலைப்பில் தீவிர கதை ஆலோசனை நடக்கிறதாம் எனக் கூறிய சத்யா மூவீஸ் இது பாட்ஷாவின் இரண்டாம் பாகம் என்று வெளியிடாமல், புதிய பெயரில் புதிய கதையுடன் உருவாக்கலாம் என்றும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளனவாம். எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

ரஜினி,ஷங்கர்,சன் பிக்சர்ஸ் கூட்டணியில் வேகமாக வளர்ந்து வருகிறது எந்திரன். எந்திரன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ‘எந்திரன்’ டீம்ல ஏற்கனவே ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்க, இப்ப இன்னொரு ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியும் உள்ளே வந்திருக்கார். ‘எந்திரனு’க்கான விசேஷ ஒலிகளை டி.டி.எஸ்ல மிக்ஸ் பண்ணிக்கிட்டிருக்கார் பூக்குட்டி.

இதனையடுத்து தன்னுடைய இணையதளத்தில் இயக்குநர் ஷங்கர் எந்திரன் பற்றி எந்த தகலும் வெளியிடவில்லை. எந்திரன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காரணமாக நீண்ட நாட்களாக தளத்தில் எதுவும் எழுதவில்லை என்றுக் கூறிய ஷங்கர் எந்திரன் குறித்து ஒரு சின்ன தகவல் அல்லது புகைப்படத்தை இங்கு வெளியிட்டால் கூட அது ஏகப்பட்ட ஆர்வத்தைத் தூண்டி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், ஒரு பாடல் காட்சி படமாக வேண்டியுள்ளது. மற்றபடி இறுதிக்கட்ட எடிட்டிங் உள்ளபட முழுப் படமும் முடிந்து, பின்னணி இசைச் சேர்ப்பு மற்றும் சவுண்ட எஃபெக்ட்ஸுக்காக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ரஸூல் பூக்குட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. கடைசி பாட்டு மட்டும் படமாக்கப்பட வேண்டும். க்ளைமாக்ஸ் மற்றும் சில முக்கிய காட்சிகளில் கிராபிக்ஸ் சேர்ப்பு பணிகள் பாக்கியுள்ளது. மீண்டும் சந்திக்கிறேன்..." என்று கூறியுள்ளார் ஷங்கர்.

கமல்ஹாசன் நடிக்கும் மன்மதன் அம்பு


குருவி’, ‘ஆதவன்’ படங்களை தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா ஜோடி சேர்கின்றனர். முதலில் இப்படத்துக்கு ‘யாவரும் கேளீர்’ என்ற பெயர் பரிசீலனையில் இருந்தது.
இப்போது மாற்றப்பட்டு, ‘மன்மதன் அம்பு’ என பெயரிடப்பட்டுள்ளது. இன்னொரு ஜோடியாக மாதவன், சங்கீதா நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த ஜோடி, ‘எவனோ ஒருவன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது.

ரஜினி படத்தில் விஜய்!


25வருடங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ரஜினி, அம்பிகா, நடிப்பில் வெளிவந்த படம், ‘நான் சிவப்பு மனிதன்’. அப்படத்தை ரீமேக் செய்து தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. இதில் ரஜினி நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறாராம். ‘தயாரிப்பு மட்டும் நான். டைரக்டர் முடிவாகவில்லை’ என எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார். இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப, ‘நான் சிவப்பு மனிதன்’ கதையில் மாற்றங்கள் செய்யப்படுமாம்.